வளர்ந்து வரும் வெளிநாட்டு முதலீடுகள்

Wednesday, May 10th, 2017

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டு நடவடிக்கைகளை  கையாளும் முதலீட்டு அதிகார சபையின் நல்லென்ன  கொள்கைகளை நன்கு புரிந்து கொண்டுள்ள  வெளிநாட்டு முதலீடுகள் அனைத்தும் சிறந்த முறையில் செயல் படுவதாக முதலீட்டு அதிகார சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரவித்துள்ளார், முதலீட்டாளர்கள்  எதிர் கொள்ளும் அனைத்து பிர்ச்சனைகளையும்  எப்போதும் எதிர்கொள்ளும் திறன் முதலீட்டு அதிகார சபையிடம் இருப்பதாகவும்  இலாப விகிதம் தொடர்பில் எந்த சிக்கல்களும் இல்லை எனவும்   தெரிவித்த அவர்      உங்கள் சொந்த முதலீட்டிற்கு 100 சதவிகிதம் உரிமை வேண்டும் என்றால், கூட நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். உங்கள் முதலீடுகள் நம் நாட்டில் பாதுகாப்பாக உள்ளன, முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு அரசியலமைப்பு உத்தரவாதம் எங்களிடம் உள்ளது எனவும் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஒரு வணிக மன்றக் கூட்டத்தில்  இவற்றை தெரவித்த முதலீட்டு அதிகார சபையின் தலைவர் உபல் ஜயசூரிய வெளிநாட்டு முதலீடுகளுக்கு இலங்கை இப்போது ஒரு சிறந்த பாதுகாப்பை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முதலில்  இரண்டு வருடங்களுக்கு விசாக்கள் வழங்கப்பட்டதாகவும்  பின்னர் இது நீட்டிக்கப்பட்டு , தற்போது அது 5 வருட காலத்திற்கு விசா வழங்கப்படுவதாகவும்  ஜயசூரிய அங்கு தெரிவித்தார்.

Related posts: