பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விசேட உளவியல் ஆலோசனை – கல்வி அமைச்சர்

Monday, June 5th, 2017

நாட்டில் ஏற்படும் திடீர் அனர்த்த நிலமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு விசேட உளவியல் ஆலோசனை வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் மனோநிலையை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தவர்களையும் சொத்துக்களையும் இழந்து பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் உளவளத்தை மீண்டும் பலப்படுத்தி சமூக மயப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டின் ஏனைய பாடசாலைகளில் பணிபுரியும் உளவியல் ஆலோசக ஆசிரியர்களினதும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்புக்களினதும் ஆதரவும் இதற்காகப் பெற்றுக்கொள்ளப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை எமுவும் இல்லை - பொதுமக்களுக்கு இலங...
சர்வதேச ரீதியில் ஹொக்ஹேயின் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!
பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரிப்பு - தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை எச...