சர்வதேச ரீதியில் ஹொக்ஹேயின் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!

Monday, June 26th, 2023

ஆண்டுதோறும் சர்வசே ரீதியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான அறிக்கை வெளியிடப்படுகின்ற நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சர்வதேச ரீதியில் ஹொக்ஹேயின் என்ற போதைப்பொருளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அதற்கான விநியோகங்களும் தற்போது அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின், போதைப்பொருள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக தற்போது, ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி ஆப்கானிஸ்தானுக்கு அப்பால் சென்று ஏனைய பல நாடுகளில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் ஹொக்ஹேயின் என்ற போதைப்பொருளின் உற்பத்தி சாதனை அதிகரிப்பு காணப்பட்டிருந்தாகவும், ஹொக்ஹேனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் அலுவலகம் சுட்டிக்காட்டுகின்றது.

சர்வதேச ரீதியில் கைப்பற்றப்பட்ட ஐஸ் மருந்துகளில் 90 சதவீதமானவை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: