ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Saturday, August 26th, 2023

சபா மண்டபத்தில் சபையின் அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும்போதும், சில சந்தர்ப்பங்களில் சபா மண்டபத்துக்கு வெளியேயும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களினால் பாராளுமன்ற பணியாளர்கள், செயலாளர் குழு மற்றும் அதன் பணியாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் அதியுயர் சபையின் கௌரவத்துக்குப் பொருத்தமற்றவை அல்லது ஏற்புடையவை அல்ல என சபையின் கவனத்துக்குக் கொண்டு வருவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் அறிவிப்பை அறிவித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நேற்று (24) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

குறிப்பாக சபை அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும் போது பாராளுமன்ற பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைய இந்தப் பணிகளை சுயாதீனமாக மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் நிறைவேற்றுவதற்கு  சபாநாயகர் அல்லது சபைக்குத் தலைமைதாங்கும் உறுப்பினருக்கு ஆலோசனை வழங்கும் அல்லது உதவும் அதிகாரிகள் என்ற ரீதியில் அரசியலமைப்புக்கு அமைய அரசியலமைப்பின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற செயலாளர் குழுவுக்கு, சுயாதீனமாக அல்லது பக்கச்சார்பற்ற முறையில் செயற்படுவதைத் தடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் அமையலாம் என்பதால், இதுபோன்று பாராளுமன்ற செயலாளர் குழுவில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதனுடன் இணைந்த பணியாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள், அடிப்படை அற்ற குற்றச்சாட்டுக்களை மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்துக்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகாரிகள் தொடர்பில் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் அவற்றை  சபாநாயகருக்கு சமர்ப்பிக்குமாறும் பிரதி சபாநாயகர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: