தேவாவும் பிரபாவும் த. தே. கூ வும்!

Saturday, December 4th, 2021

தேவாவும் பிரபாவும் இரு வேறு அரசியலின் எதிரும் புதிருமான தலைவர்கள். கோட்டைகள் இரண்டு. இருவரும் கொண்ட கொள்கை இலக்கு ஒன்று,..கொள்கை ஒன்று என்று கூறுவதை குணத்தாலும் ஒன்று பட்டவர்கள் என்று யாரும் கருதி விடக்கூடாது,…

ஆயுதப்போராட்ட களத்தில் நின்ற போது தேவா, பிரபா சார்ந்த இரு அமைப்புகளும் ஆயுத வழிமுறை மூலமே உரிமை கிடைக்கும் என்றார்கள். ஏனைய விடுதலை அமைப்புகளும் அன்று அதே வழிமுறைதான்.

ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் என ஒரே இலக்கில் ஒன்று பட்டிருந்த விடுதலை இயக்கங்கள் மீது,..பிரபாவின் இயக்கம் ஏக தலைமை தாமே என சகோதரப்படுகொலையை ஏவி விட,..சிதைந்தது தமிழரின் உரிமைப்போராட்ட ஒற்றுமையின் பலம்.

திம்பு பேச்சு வார்த்தை மேசையில் ஒன்று பட்டு உலகையே தம் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது ஈழப்போராட்டம் சகோதரப்படு கொலைகளால்அதே உலக நாடுகள் அருவருப்பாக பார்த்தன,..தருணம் பார்த்து உருவானது இலங்கை இந்திய ஒப்பந்தம்.

தமிழருக்கு கிடைத்த அரும் பெரும் வாய்ப்பு அது,..ஆயுதப்போராட்டத்தில் இருந்து சந்தி பிரித்து தேசிய நல்லிணக்க பாதையில் நடந்தார் தேவா.

உரிமைப்போராட்டம் அழிவு யுத்தமாகவும் வன்முறைக்களமாகவும்  மாறிவிட்ட சூழல் உணர்ந்து,.. தீர்க்கதரிசனமாக தேவா சொன்னது என்ன?…அழிவு யுத்தம் அவலங்களை தவிர இனி எதையும் பெற்றுத்தராது,..அது கொஞ்சம் கொஞ்சமாக மக்களையும் அழித்து உங்களையும் அழித்துவிடும்,. அழிவு யுத்தம் எமது மக்களை நடுத்தெருவிற்கே கொண்டு வந்து நிறுத்தி விடும்,..என்றார் தேவா!….

இல்லை,.. ஆயுத வன்முறை மூலமே எதையும் அடைந்து விட முடியும்,. இறுதி வரை அதையே தொடர்வோம் என்றார் பிரபா!,….

தேசிய நல்லிணக்க வழியில் உறுதியாக நின்ற தேவா இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் பிரபாவின் வன்முறை வழிமுறையை ஏற்கவில்லை.

ஆயுத வன்முறையில் உறுதியாக இருந்த பிரபா இறுதி வரை தேவாவின் வழிமுறையை ஏற்கவில்லை.

இறுதியில் நடந்து முடிந்தது என்ன?..

இதில் இன்னொரு பிரிவினர்,…பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் என்பது போல்,..

புலிகளுக்கு ஒரு முகமும் அரசுக்கு இன்னொரு முகமும் காட்டி  இரட்டை வேட நாடகமாடியே காலத்தை ஓட்டினர்,…

அதுதான் த, தே, கூ,.. த. தே. கூவை பிரபா ஒரு உருளைக்கிழங்கு மூட்டை  போலவே சேர்த்து கட்டி வைத்திருந்தார்.

பிரபா இல்லாமல் போனதும் எல்லா கிழங்குகளும் கட்டவிழ்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்கினம்.

ஆனாலும் தேர்தல் மட்டும் அவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறது.  ஆகவே த. தே. கூ என்றால் அதன் அர்த்தம் என்ன என்பது  சொல்லாமலே புரிந்து விடும்,..

தொடரும்,..

– நன்றி: அனுபவ புத்திரன்_

000

Related posts: