நாட்டு மக்களுக்கு அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

Friday, October 30th, 2020

மக்கள் தேவைக்கு அதிகமாக பொருட்களை கொள்வனவு செய்வதை முதலில் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் நச்திப்பின் போதே அவர் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துளளார்.

தொடர்ந்தம் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்தவும், அரச சேவையினை சீராக முன்னெடுக்கவும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துகிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒரு சில பிரதேசங்களில் மக்கள் பொறுப்பட்ட விதமாக செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.

ஊரடங்கு சட்டம் முழு நாட்டுக்கும் மாத கணக்கில் அமுல்படுத்தப்படும். என தவறான வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொது மக்கள் தேவைக்கு அதிகமாக பொருட்களை கொள்வனது செய்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளை முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வசதி படைத்தோர் பொருட்களை கொள்வனவு செய்யும் போது சாதாரண மக்களை கருத்திற் கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களை தேவைக்கு மேலதிகமாக கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: