தேர்தலில் குழறுபடிகளை தவிர்க்க தொகுதிவாரி முறையே உகந்தது -அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Saturday, December 10th, 2016

தேர்தல் சட்டங்களை மீறி செயற்படுவோர் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் வேட்பாளர்களை தேர்தலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தேர்தல் ஆணையாளரைக் கேட்டுக்கொண்டார்.

அரசியலமைப்புத் திருத்தத்தோடு நாட்டில் சிறந்த முறையில் நீதியும் நேர்மையும் அமைதியுமான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவது அவசியம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சிச் சபை தேர்தலிலிருந்து தொடர்ந்து வரும் அனைத்துத் தேர்தல்களையும் தொகுதிவாரி முறைப்படி நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமானால் தேர்தலில் இடம்பெறும் குழறுபடிகள், மோசடிகளை பெருமளவு தீர்க்க வழி பிறக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் எதிர்ப்பு மாநாடு நேற்று கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;

செலவுகளைக் குறைக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை எடுத்துக் கொண்டாலும் தேர்தல் பிரசாரங்களுக்கு கோடி கோடியாக நிதியைத் தேடிக் கொள்கின்றன. அத்தகைய நாடுகளிலேயே அவ்வாறு இடம்பெறுமானால் இங்கும் அது விதிவிலக்கல்ல, இதனைக் கருத்திற்கொண்டு மிகச் சிறந்த தேர்தல் முறையொன்றை நாட்டில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்

colnimal-siripala-de-silva183601997_5083516_09122016_ssk_cmy

Related posts: