வெளிமாவட்டங்களிலிருந்து மன்னாருக்கான போக்குவரத்து முற்றாக முடக்கம் – மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அறிவிப்பு!

Friday, October 9th, 2020

மன்னார் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் –

வெண்ணப்புவ பகுதியில் இருந்து மன்னார் பட்டித்தோட்டம் பகுதிக்கு வந்து கட்டிட பணியில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சீ.பி.ஆர் பரிசோதனையின் போது குறித்த நபர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து செல்லுகின்ற அனைத்து தனியார், அரச பேருந்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பட்டித்தோட்டம் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரதேசத்தை அண்டிய பகுதியிலிருப்போருக்கும் பீ.சி.ஆர். பிரிசோதனைகள் முன்னெடுக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மன்னாரிள் உள்ளக பிரதேசங்களில் இயங்குகின்ற அலுவலகங்களில் குறைந்த அளவு பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொது மக்களுக்கான சேவைகள் இன்றைய தினமும், எதிர் வரும் சில தினங்களுக்கும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: