தேர்தல் நடத்துவது தொடர்பான நீதிமன்றின் முடிவு வரும்வரை உள்ளூராட்சி சபை தேர்தல் ஆவணங்கள் எவையும் அச்சிடப்படாது – அரசாங்க அச்சக அலுவலகப் பிரதானி தெரிவிப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வாக்களிக்கும் திகதிகளைக் குறிப்பிடும் வாக்கு சீட்டுகள் உட்பட ஆவணங்கள் அச்சிடப்பட மாட்டாது என அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி திருமதி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை அச்சகம் செலவிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது உச்சநீதிமன்றத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக வழக்கு நடந்து வருவதாகவும், அதன் முடிவு வரும் வரை தேர்தல் பணிகள் நடைபெறாது என்றும் அவர் கூறினார்.
மேலும், அரசு நிறுவனங்களின் சேவைகளுக்கு செலவிடப்படும் பணத்தை முன்கூட்டியே பெறுவதற்கு அரசாங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி பணத்தைப் பெற்ற பின்னர் அச்சகம் தனது பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் - யாழ்.இந்தியத் துணைத் தூத...
ஒரே தடவையில் 14மருத்துவர்கள் வெளிநாட்டுக்கு பயணம்: விசாரணைக்கு அமைச்சர் பணிப்பு!
கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் - மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை!
|
|