தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – தேர்தல்கள் ஆணைக்கு அறிவிப்பு!

Monday, August 3rd, 2020

ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளைமறுதினம் 5 ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் 22 மாவட்டங்களில் அங்கிகரிக்கப்பட்ட 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளன. அவற்றில் 7 ஆயிரத்து 45 பேர் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

அத்துடன் குறித்த தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 12 ஆயித்து 984 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


புற்று நோயாளர்கள் மற்றும் சிறுவர்களுக்கு புதிய வைத்தியசாலைகள் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்ப...
மே - ஜூன் மாதங்களில் சாதாரண தர பரீட்சை - 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 2இல் ஆரம்பிக்...
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க - சீனாவின் துணை நிதி அமைச்சர் லியோ மின் சந்திப்பு - இலங்கையின...