மே – ஜூன் மாதங்களில் சாதாரண தர பரீட்சை – 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 2இல் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, February 14th, 2024

2023 ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே – ஜூன் மாதங்களில் இடம்பெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று இடம்பெற்ற இலவச பாடப் புத்தக விநியோக தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை

2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய நடனம், இசை, நாடகமும் அரங்கியலும் மற்றும் மனைப் பொருளியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நடனம் மற்றும் இசை ஆகிய பாடங்கள் தொடர்பான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாடகமும் அரங்கியலும் மற்றும் மனைப் பொருளியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 7ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


49 cc இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ய...
இஸ்‌ரேல் - காஸா போர் நிறுத்தம் - முதல்கட்டமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பிணைய கைதிகள் விடுதலை!
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுக...