ஆரோக்கியமான குடும்ப ஊட்டத்தை உருவாக்குவதே இலக்கு – வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் திட்டவட்டம்!

Monday, July 10th, 2023

பிள்ளைகளை சரியான வழியில் கையாளும் “நல்ல பெற்றோராக இருத்தல்” என்னும் நோக்கில் பெற்றோருக்கு உரிய வழிகாட்டுதல்களையும், பயிற்சிகளையும் வழங்குவதற்கு  தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் .சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –

யாழ்மாவட்ட அரச அதிபரால் கொண்டுவரப்பட்ட இரு நாட்கள் தனியார் கல்வி நிறுவங்களிற்கு விடுமுறை என்ற திட்டத்தை நான் ஏற்கனவே வவுனியா அரச அதிபராக இருக்கும் போது அங்கு செயற்படுத்தி இருந்தேன்.

இப்பொழுது, இங்கு வெள்ளி மாற்றும் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகளிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நான் வார இறுதி நாட்களில் (சனி,ஞாயிறு) வகுப்புகளை நடத்த கூடாது என்ற திட்டத்தை கொண்டு வந்ததுடன், தினமும் காலை 6 மணிக்கு முன்னதாக, மாலை 6 மணிக்கு பின்போ வகுப்புக்களை நடத்தக் கூடாது,  சகல தனியார் கல்வி நிலையங்களும் பதிவு செய்யப்பட வேண்டும், மாணவர்களின் வரவு பதிவு செய்யப்பட வேண்டும், மாணவர் ஒருவர் பாடசாலைக்கோ அல்லது தனியார் வகுப்புகளிற்கோ வராதுவிடில் உடனடியாக பெற்றோருக்கு தெரியப்படுத்தல், ஒவ்வொரு தனியார் கல்வி நிலையங்களிலும் மாணவிகளின் நலனை கவனிக்க பெண் ஊழியர் ஒருவர் கட்டாயம் பணியில் இருந்தல், வகுப்பிலிருந்து சகல மாணவர்களும் வெளியேறும் வரை ஒரு ஊழியராவது தனியார் கல்வி நிலையங்களில் நிற்றல் போன்ற சட்டங்களை கொண்டு வந்திருந்தோம்.

இப்பொழுது, அத்தகைய திட்டங்களை யாழ் அரச அதிபர் செய்ய முன்வந்துள்ளமை மிகவும் நல்ல விடயம்.  இதை அவர்கள் சிறப்பாக முன்னெடுத்தால் ஆரோக்கியமான இளைய சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

வடக்கிலுள்ள சகல பாடசாலைகளிலும் இனிமேல் தினமும் ஒரு பாடவேளை கட்டாயமாக மாணவர்களின் மன இறுக்கத்தை தளர்த்தும் வகையில் கற்றல் தவிர்ந்த யோகாசனம், விளையாட்டு, இசை,நடனம் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்துமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

இதனுடாக, மாணவர்களின் ஆற்றல்களை சரியான வழியில் நெறிப்படுத்துவதால் அவர்கள் தவறான வழியில் செல்வது தவிர்க்கப்படும்.

பிள்ளைகளை சரியான வழியில் கையாளும் “நல்ல பெற்றோராக இருத்தல்” என்னும் நோக்கில் பெற்றோருக்கு உரிய வழிகாட்டுதல்களையும், பயிற்சிகளையும் வழங்க தீர்மானித்துள்ளோம்.

இதனுடாக பெற்றோரிற்கும், பிள்ளைகளிற்கு இடையிலான உறவினை நெருக்கமாக்கி, ஆரோக்கியமான குடும்ப ஊட்டத்தை உருவாக்குவதே இலக்காகும் எனவும் தெரிவித்துள்ளமை குகுறிப்பிடத்தக்கது

000

Related posts: