தேசிய வீடமைப்பு அதிகார சபை நிதியில்!

Friday, March 2nd, 2018

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 392 வீடுகள் அமைக்கப்படும் சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதியுதவியூடாக 392 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஐந்து இலட்சம் ரூபா நிதி உதவியுடன் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

சங்கானை பிரதேச செயலர் பிரிவு அராலி தெற்கு கிராமத்தில் 114 வீடுகளும் அராலி கிழக்கு கிராமத்தில் 105 வீடுகளும் அராலி மேற்கு கிராமத்தில் 70 வீடுகளும் மூளாய் கிராமத்தில் 50 வீடுகளும் மற்றும் துணைவி கிராமத்தில் 53 வீடுகளும் அமைக்கப்படவுள்ளதுடன் இதற்குரிய பயனாளிகள் தெரிவும் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: