மின் சேமிப்புக்காக வீடொன்றுக்கு ஒரு மின்குமிழை அணையுங்கள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை!

Wednesday, December 8th, 2021

உரிய முகாமைத்துவத்துடன் மின்சாரத்தை பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, மின் பாவனையாளர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக  அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருந்து தெரிவிக்கையில் –

கடந்த சில தினங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ச்சியாக மின் விநியோகத்தை மேற்கொள்வது எமது பொறுப்பாகும். எவ்வாறாயினும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்த நாம் முயற்சித்து வருகிறோம்.

மேலும், மின் பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாகவும், உரிய முகாமைத் துவத்துடனும் பயன்படுத்த வேண்டும். வீடு ஒன்றுக்கு ஒரு மின்குமிழை அணைக்க முடிந்தால் நாள் ஒன்றுக்கு 7 மில்லியன் மின் குமிழ்களை அணைக்க முடியும்.

அதாவது வீட்டில் தேவையற்ற இடத்தில் ஔிரும் மின் குமிழைதான் சொல்கிறேன். மின்சாரத்தை சேமிப்பது என்பது குறுகிய காலத்தில் செய்ய வேண்டிய ஒன்றல்ல. இது ஒரு பழக்கமாக, நம் வாழ்வின் ஒரு பகுதியாக நாம் செய்ய வேண்டிய ஒன்று.” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: