வித்தியா படுகொலை சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு!

Wednesday, May 3rd, 2017

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 10 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை நீதவான் எம்.ஐ.எம்.றியாழ் குறித்த உத்தரவை இன்று (03) பிறப்பித்துள்ளார்.

இதில் 6ஆவது சந்தேகநபர் நீதவானிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.“எனது தாய் சுகயீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 12 பேரில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவர்களுக்கு எதிராக “ட்ரயல் அட்பார்” (நீதிபதிகள் அடங்கிய விசாரணை) ஆரம்பிக்க சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருகின்றது.

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டு 2 வருடங்கள் ஆகும் நிலையிலும் இதுவரை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கப்பெறவில்லை என்பதோடு, மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கில் கூட்டுறவு சங்கங்களின் நிறுவன செயற்பாடுகள் திருப்தியாக இல்லை – வடக்கின் ஆளுநர் குற்றச்சாட்டு...
இலங்கைக்காக, சர்வதேச நாணய நிதியத்தில் அமெரிக்கா ஏன் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை – இலங்கைக்க...
பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகள் - சுற்றறிக்கை வெளியிடப்படும் என கல...