போதைப்பொருள் பாவனை – வாகன சாரதிகளை கண்காணிக்கும் அதிநவீன உபகரணம் இலங்கையில்!

Thursday, December 22nd, 2022

போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து நவீன தொழிநுட்ப உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் அந்த உபகரணங்களை பயன்படுத்தி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாளாந்தம் வாகன விபத்துக்களில் சுமார் 8 பேர் உயிரிழப்பதாகவும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 4 அல்லது 5 பேர் உயிரிழப்பதாகவும் பொலிஸ் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவதாகவும், அதைக் குறைக்கும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு சோதனைகள் தொடங்கப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: