தேசிய பாடசாலைகளில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு!

Tuesday, July 30th, 2019

தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர் பற்றாக்குறையை விரைவில் பூர்த்தி செய்யவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச சேவை ஆணைக்குழு, கல்வி சேவை குழுவுக்கமைய இதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் அதிபர் சேவையின் அதிகாரிகள் விண்ணப்பிக்க முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சகல தகவல்களும் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 21 ம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பமுடியுமென கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: