அனைத்து பாடசாலைகளினது ஆரம்ப பிரிவுகளும் இன்றுமுதல் ஆரம்பம் – சீருடையில் பாடசாலைக்கு செல்வது கட்டாயம் இல்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, October 25th, 2021

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கான சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம் மாணவர்கள் சீருடையில் பாடசாலைக்கு செல்வது கட்டாயம் இல்லை எனக் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாகப் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறானதொரு சூழலில் பெரும்பாலான மாணவர்களின் சீருடைகள் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பொருத்தமான ஆடைகளை அணிந்து மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலையில் மாணவர்களின் வருகை குறைந்த நிலையில்  காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு பூராகவும் இன்றையதினம் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் உள்ள ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் வழமைபோல் ஆரம்பமாகி இடம்பெற்றன.

எனினும் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுவதாகவும் பாடசாலைக்கு வந்த மாணவர்களோடு கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts: