இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானி நியமனம்!

Friday, July 5th, 2019

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானியாக இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நேற்று (04) உத்தியோகபூர்வமாக தனது கடமை பொறுப்பை சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்பு பொறுப்பேற்றார்.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை வகித்த இவர் இடமாற்றத்தின் பின்பு இந்த பிரதி பதவி நிலை பிரதானி பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இந்த அதிகாரியின் புதிய பதவியேற்பு நிகழ்வில் இராணுவ பொது நிர்வாக பிரதானி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், இராணுவ செயலாளர் நாயகம், நிதி மேலாண்மை பணிப்பாளர் நாயகம், போர்கருவி பணிப்பாளர் நாயகம், பயிற்சி பணிப்பாளர் நாயகம் போன்ற உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.

2007 ஆம் ஆண்டு இராணுவ பயிற்சி பணிப்பாளராகவும், 2010 – 2013 வரை சுபசாதனை பணியகத்தின் பணிப்பாளராகவும், இராணுவ எகடமியின் கட்டளை தளபதியாகவும், 51, 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும், சீனாவில் பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.

இவரது சேவையை கௌரவித்து ரணவிக்ரம பதக்கம், ரன சூர பதக்கம், உத்தம சேவா பதக்கங்கள் இராணுவத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

Related posts: