சீரற்ற வானிலை: 10 பேர் பலி – 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Sunday, June 6th, 2021

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.

இதன்படி 8 மாவட்டங்களை சேர்ந்த 2 இலட்சத்து 19 ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி முதலான மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக, 10 பேர் மரணித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த அனர்த்தம் காரணமாக 11 வீடுகள் முழுமையாகவும், 724 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் 528 குடும்பங்களை சேர்ந்த 15 ஆயிரத்து 499 பேர், 69 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் மேலும் 612 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 471 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தீர்வு விடயத்தில் சம்பந்தரின் நிலைப்பாடு என்ன? தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன...
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை வீழ்ச்சி - தேசிய டெ...
இலங்கை மாணவர்களுக்கு அதிக புலமைப்பரிசில் வாய்ப்பு - இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!