தீர்வு விடயத்தில் சம்பந்தரின் நிலைப்பாடு என்ன? தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன் !

Thursday, April 21st, 2016

தீர்வுவிடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் நிலைப்பாடு என்ன? என்பதை வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமன்தினம் (18)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அங்கு  அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்திருந்ததுடன், அதனை முன்னிலைப்படுத்தியே வாக்குக்  கேட்டனர். அதற்கமைய மக்கள் ஆணையினையும் பெற்றுக் கொண்டனர்.

அவர்கள் கோரிய சமஷ்டி முறையிலான யோசனைகளே வடமாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைகள் குறித்துத்  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேறுமாதிரியான கருத்தினைத்  தற்போது தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளானது குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிப்பதற்குச் சமமானது எனக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்  தெரிவித்துள்ளார். இதில் எந்தவித நியாயமும் இல்லை.  இதனால் சம்பந்தர் எந்த இலக்கை நோக்கி பயணிக்கின்றார் என்பதை மக்களுக்குத்  தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.

Related posts: