சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 8th, 2020

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவாமல் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை விலேகொட தம்மயுக்திகாராம விஹாரையில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையத்தில் நேற்று தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

மேலும் கொரோனா நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழலில் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாத்து தேர்தலை நடத்துவதற்கான ஏதுநிலைமைகள் குறித்து ஆராய்வதே தமது கடமை எனவும் அவர் கூறினார்.

மாறாக தேர்தலை நடத்த எவ்வளவு செலவாகும் என்பதை மதிப்பிடுவது தமது கடமை அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் விலையை மதிப்பிட முடியாது எனவும் அதனை இலாபமாக பெற முடியாது எனவும் தெரிவித்த அவர், பல உயிர்களை பலிகொடுத்தே ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளதாகவும் கூறினார்.

தேர்தலை நடத்தியதால்தான் கொரோனா பரவல் அதிகத்தது என கேட்க கூடாத அளவுக்கு தேர்தலை நடத்த முடிந்தளவு முயற்சிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related posts: