பாடசாலை சூழலை சுத்தமாக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை !

Saturday, April 22nd, 2017

எதிர்வரும் 26ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பாடசாலை சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உரிய தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்த ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை கல்வியமைச்சில் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் கல்வி, சுகாதார, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற, அரச பாதுகாப்பு அமைச்சுக்களின் அதிகாரிகள் பங்கேற்பார்கள். பாடசாலை வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் இருந்தால், அவற்றை முறையாக சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆட்கொல்லியிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதார அமைச்சு பல திட்டங்களை அமுலாக்கிறது. இவற்றுள் நுளம்புகளை ஒழிக்கும் முயற்சிகளும் , விழிப்புணர்வு ஏற்பாடுகளும் அடங்கும்.

Related posts: