தென் கொரியாவுக்கு ஜனாதிபதி விஜயம்!

எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தென் கொரியா – இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், ஜனாதிபதியின் குறித்த இந்த விஜயம் அமையவுள்ளது. இதேவேளை, அவர் எதிர்வரும் 29ம் திகதி தென் கொரிய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இலங்கை மற்றும் தென் கொரியாவுக்கு இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிலவும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடற்படைத் தளபதி – விமானப்படைத்தளபதி சந்திப்பு!
உலகக் கிண்ண கூடைப்பந்து - உலக சாதனை படைத்தார் யாழ்ப்பாண யுவதி!
வேட்புமனுத் தாக்கல் இன்று!
|
|