புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, April 13th, 2024

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும் எனவும் புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் மற்றும் உலகம் என்பன முன்னேற முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் – புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும். புதிய வருடம் பிறத்தல், புதிய நாட்காட்டி, பருவத்திற்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன.

இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும்.

புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எவரும் குண்டுகளை வெடிக்கச் செய்ய மாட்டார்கள் – பாதுகாப்பு அமைச்சின் செ...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் விவகாரம் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!
நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை வருகைதந்த ஜப்பானியத் தூதுக்குழ...