பாடசாலை அதிபா்கள் தொடர்பில் முக்கிய பணிப்புரை விடுத்துள்ள வடக்கின் ஆளுநர்!

Sunday, September 22nd, 2019


யாழ்ப்பாணத்திலுள்ள  பாடசாலைகளில் பெற்றோர்களிடமிருந்து பணத்தை இலஞ்சமாக வாங்கிய இரு பாடசாலை அதிபா்களுக்கு எதிரான விசாரணைகளை துாரிதப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபரும், தென்மராட்சி கல்வி வலயத்திற் குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபரும் லஞ்சம் வாங்கிய நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

குறித்த அதிபர்கள் இருவர் மீதும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிர்வாக மட்ட விசாரணைகளில் மோசடிகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் இருவருக்கும் எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் நகரில் உள்ள பிரபல ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவர் அனுமதிக்கு இலட்சம் ரூபா வரை பணம் பெறப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலும் வடக்கு மாகாண ஆளுநர் கவனம் செலுத்தியுள்ளார்.

இதேவேளை, 2020ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மாணவர் அனுமதிக்கு அதிபர்கள் பணம் கோரினால் அதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு உரிய முறைப்பாட்டை வழங்க வசதியாக விண்ணப்பப் படிவம் ஒன்றை வெளியிட ஆளுநர் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: