தென்னைப் பயிர்ச் செய்கை தொடர்பில் வழிகாட்டல்!

Friday, November 2nd, 2018

யாழ்ப்பாணப் பிராந்திய தென்னைப் பயிர் செய்கை சபையால் தென்னைப் பயிர்ச் செய்கை தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சபை தெரிவித்துள்ளது.

தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் தென்னை தொடர்பான விரிவாக்கல் நிகழ்ச்சி வெலிஓயா பிரதேசத்தில் ஜனகபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தென்னை தொடர்பான தொழில்நுட்ப கருத்துக்கள், பசளைப் பிரயோகம், நடுகை முறைகள், உற்பத்தித் திறனை அதிகரித்தல்  தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 50 பயனாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

மற்றொரு நிகழ்வு வலி.தெற்கு பிரதேச சபை மண்டபத்தில் காலை 9மணியளவில் பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கற்பகதரு சங்கங்களின் எதிர்காலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு ஏதுவாக திட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன. சங்கங்களுக்கான சமாசமும் உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கற்பக சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என 150 பேர் பங்குபற்றினர்.

Related posts: