யாழ்.மாநகரசபை பகுதியில் கழிவகற்றல் பணி தீவிரம்!

Monday, October 31st, 2016

யாழ்.முற்றவெளி பகுதியில் தேங்கி கிடக்கும் பொலித்தீன் மற்றும் கழிவுப் பொருட்கள் யாவும் உடனடியாக அகற்றப்படும் என்று மாநகர கழிவகற்றும் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்காக நடைபாதை வியாபாரத்தின் போதே பெருந்தொகையான பொலித்தீன்கள் மற்றும் கழிவுகள் இப்பகுதியில் தேங்கி காணப்பட்டன.

இந்தக் கழிவுகள் காற்றினால் அள்ளி செல்லப்படுகின்றன. கூடுதலான கழிவுகள் இப்பகுதியை அண்டிய பகுதிகளில் குவிந்த நிலையில் காணப்படுகின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்தபோதும் மழையையும் பொருட்படுத்தாது கழிவகற்றும் பிரிவினரால் இவைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இக்கழிவுகளின் தேக்கத்தினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். நேற்று மழை பெய்ததால் சுகாதார சீர்கேடும் ஏற்படலாம். இப்பகுதிகளில் உள்ள வீரசிங்கம் மண்டப தொகுதி, முனீஸ்வரன் வீதி, புல்லுக்குள பகுதி, ஆஸ்பத்திரி வீதி, யாழ்.பிரதம தபாலக பகுதி என்பன பொலித்தீன் கழிவுகளால் நிரம்பி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

jaffna_minicipal_council

Related posts: