தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் – ஜனநாயகம் மற்றும் நீதியை வலுப்படுத்துவதில் பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்புக்கும் பாராட்டு!

Saturday, November 5th, 2022

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் அதிமேதகு சாண்டில் எட்வின் ஷால்க் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்..

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த உயர் ஸ்தானிகர் மற்றும் குழுவினரை யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர வரவேற்றார்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போது, சிவில்- இராணுவ ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் விசேட கவனம் செலுத்தும் படையினரின் தற்போதைய ஈடுபாடுகள் தொடர்பாக உயர் ஸ்தானிகர் கலந்துரையாடினார்.

யாழ். குடாநாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அமுல்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி விளக்கமளித்தார்.

புறப்படுவதற்கு முன், தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் யாழ். பொதுமக்கள் மத்தியில் அமைதி, ஜனநாயகம் மற்றும் நீதியை வலுப்படுத்துவதில் யாழ். பாதுகாப்பு படையினரின் முழுமையான அர்ப்பணிப்புக்காகப் பாராட்டி விருந்தினர் புத்தகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

பின்னர், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் ஆகியோர் நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: