தப்பித்த இலங்கையர்கள்- சர்வதேசத்திற்கு நன்றி சொல்லும் இலங்கை!

Friday, March 17th, 2017

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பான முறையில் இலங்கையர்களையும் எண்ணெய் கப்பலையும் மீட்கப்பட்டமைக்கு வெளிவிவகார அமைச்சு நன்றி தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கடற்கொள்ளையர்களினால் ஏரிஸ் 13 என்ற துபாய் நாட்டுக்கு சொந்தமான கப்பல் கடத்திச் செல்லப்பட்டது. இலங்கையை சேர்ந்த எட்டு மாலுமிகளும் அதிலிருந்தனர்.

இந்நிலையில் எந்தவித இன்றையதினம் எந்தவித கப்பமும் கோராத நிலையில் கப்பலும், அதிலிருந்தவர்களும் கொள்ளையர்களினால் விடுவிக்கப்பட்டனர். இதற்காக பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது நன்றியை தெரிவித்துள்ளது.

இதற்காக உதவிய, Puntland ஜனாதிபதி, சோமாலிய படையினர், ஏனைய நாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை கடத்தப்பட்ட கப்பலை மீட்க சோமாலிய கடற்படையினர் கடும் முயற்சி மேற்கொண்டனர். இதன்போது கொள்ளையர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.இதனையடுத்து இன்றையதினம் கப்பல் கொள்ளையர்களினால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: