க.பொ.த சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்டவாறு நடைபெறும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, May 11th, 2022
2021 ஆம் கல்வி ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜுன் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், குறித்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் பரப்படுகின்றன.
இந்த நிலையில், குறித்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!
வாக்காளர் இடாப்பின் 2 ஆம் கட்டப் பணிகள் ஆரம்பம்!
போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம் - இராணுவ ...
|
|
|


