பேருந்து மீது தாக்குதல் சம்பவம்:  60ஆயிரம் ரூபா நட்டஈடு, 48ஆயிரம் ரூபா அபராதம்!

Wednesday, January 18th, 2017

காரைநகர் போக்குவரத்துச் சாலைக்குச் சொந்தமான பேருந்தினை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்ட குற்றவாளிகள் 12பேருக்கு தலா 4ஆயிரம் ரூபா வீதம் 48 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த யாழ்ப்பாண நீதிவான் சின்னதுரை சதீஸ்தரன் குறித்த 12பேருக்கும் 1வருடம் ஒத்திவைக்கப்பட்ட 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

மேலும் பேருந்தினை தாக்கி சேதம் விளைவித்த குற்றத்திற்கு 5,350ரூபா போக்குவரத்துச் சாலைக்கு நாட்டஈடாக வழங்க உத்தரவிட்ட நீதிவான், நடத்துநரிடம் இருந்து அபகரித்த பயணசீட்டு பணமான 25,076ரூபா பணத்தினை மீளவும் அவரிடம் வழங்குமாறும் அதைவிட வழக்கினை கொண்டு நடத்திய காரைநகர் சாலைக்கு தலா 5,000ரூபா வீதம் 12பேரும் 60ஆயிரம் ரூபா செலுத்த நீதிவான் உத்தரவிட்டார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 16ஆம் திகதி போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டிருந்த காரைநகர் சாலைக்குரிய பேருந்தினை கச்சேரி பகுதியில் இடைமறித்த பருத்தித்துறைப் பகுதியினை சேர்ந்த நபர்கள் சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பேருந்தினை அடித்து சேதப்படுதியிருந்தனர். இது தொடர்பில் பேருந்து நடத்துநர் யாழ்.பொலிஸ் நிலையத்தில்  செய்த முறைப்பாட்டையடுத்து 12 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ் வழக்கு கடந்த 3மாதம் நடைபெற்ற நிலையில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது

p_court-720x480

Related posts: