தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகை!

தென்கொரியாவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் யுன்க்னக்சி (Yun Byung-se) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகளின் 40 ஆண்டு நிறைவினை முன்னிட்டு அவர் இன்று இந்த விஜயத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நட்புறவு மேலும் வலுவடையும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.31 வருடங்களின் பின்னர் தென்கொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் 1,729 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்: தாவடியில் 300 குடும்பங்கள் நேரடிக் கண்காணிப்பில் ...
வடக்கு - கிழக்கில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் - புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரை...
சீனா அளித்து வரும் கடன்கள் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் - அமெரிக்கா கவலை!
|
|