யாழ்ப்பாணத்தில் 1,729 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்: தாவடியில் 300 குடும்பங்கள் நேரடிக் கண்காணிப்பில் – யாழ் மாவட்ட அரச அதிபர்!

Monday, March 23rd, 2020

யாழ் மாவட்டத்தில் 1 729 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலமை தொடா்பாக ஊடகங்களுக்கு இன்று கருத்துதெரிவித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

192 நபா்கள் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டநிலையில் அவர்களில் 80 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்படுகின்றனர்.

அத்துடன் கொக்குவில் தாவடியில் உள்ள 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ் மாவட்ட மக்கள் விழிப்புணா்வு ஆலோசனைகளை தொடர்பில் மிக அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒருவா் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளதன் அடிப் படையில் 1729 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்,

அரியாலை பகுதியில் மட்டும் 192 பேர் 80 வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

அதேபோல் கோரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டிருக்கும் கொக்குவில்  தாவடி கிராமத்தின் ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருகிறது. மக்கள் விழிப்புணா்வுடன் செயற்படுவதால் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்கலாம் எனவும் அரச அதிபர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் ஊரடங்கு மேலும் 2 அல்லது 3 வாரங்களுக்கு நீடிக்கப்படலாம் என்றும், எனவே மக்கள் தமக்கு தேவையான உதவிகளை தமது பிரதேச செயலா் ஊடாக தொடா்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெதுப்பக பொருள்களை விநியோகம் செய்ய இன்று காலை நடவடிக்கை எடுத்ததுடன் மாலையிலும் அதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் மருந்துகளையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருள்களையும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் ,பிரதேச செயலா்கள் ஊடாக இனங்காணப்பட்ட 64 ஆயிரம் குடும்பங்களுக்கும் உலா் உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இடர் முகாமைத்துவ பிரிவு ஊடாக ஒரு மில்லியன் ரூபாய் நிதியை வழங்க அந்த அமைச்சு இணங்கியுள்ளதாக தெரிவித்த அரச அதிபர், மேலும் பிரதமா் ஊடாக மாவட்டத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் வழங்கவும் இணக்கம் காணப்பட்டிருக்கின்றதாகவும் இதன்போது தெரிவித்தார்.

எனவே மக்களுக்கான உதவிகள் கிடைக்கும், மக்கள் விழிப்பாக இருப்பதுடன், நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்றார்.

Related posts: