தெங்கு அறுவடை 10 சதவீதத்தினால் வீழ்ச்சி – தெங்கு உற்பத்திச் சபை தலைவர்

Monday, April 24th, 2017

நாட்டின் வறட்சியின் காரணமாக தெங்கு அறுவடை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது என்று தெங்கு உற்பத்திச் சபை தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.

தெங்கு உற்பத்தி அறுவடை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்குமென்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைய தேங்காயின் விலை வீழ்ச்சியடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேங்காய்க்கான கோரிக்கை அதிகரித்துள்ளமை விலை அதிகரிப்பிற்கு மற்றுமொரு காரணமாகுமென்றும் தெங்கு உற்பத்திச் சபை தலைவர் தெரிவித்தார்.

தெங்கு உற்பத்திச் சபை கடந்த வருடத்தில் 24 கோடி 60 இலட்சம் ரூபா வருமானத்தைப் பெற்றுள்ளது. மாதிரி தெங்கு பூங்கா மற்றும் தென்னங்கன்றுகள் உற்பத்தியின் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

Related posts: