டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது – தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவிப்பு!

Tuesday, October 18th, 2022

ஓட்டோ டீசல் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதும் பேருந்து கட்டண திருத்தத்தை கருத்தில் கொள்ள இந்த விலை குறைப்பு போதுமானதாக இல்லை என்று தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) தெரிவித்துள்ளது.

NTC பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா இதுகுறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில் –

பேருந்து கட்டண திருத்தம் மேட்கொள்ளப்பட வேண்டுமாயின் ஒரு லீற்றர் டீசலின் விலை 4% அல்லது அதற்கும் அதிகமாக குறைக்கப்பட வேண்டும். இருப்பினும், தற்போதைய டீசல் விலைக்கு இணையாக பேருந்து கட்டணத்தை மாற்றுவதற்கான கணக்கீடு நடந்து வருகிறது.

இதேவேளை, தற்போதைய டீசல் விலை குறைப்பு பஸ் கட்டண மீளாய்வுக்கு உதவாது என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் (IPPBA) தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

டீசல் விலை குறைந்தாலும் மசகு எண்ணெய், டயர், டியூப், பேட்டரி, வாகன சேவை கட்டணம், உதிரி பாகங்களின் விலை குறையவில்லை. தற்போதுள்ள பேருந்துக் கட்டணத்தை மேலும் குறைக்கும் பட்சத்தில் எங்களால் சேவையை தொடர முடியாது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 14 பேர் குணமடைந்துள்ளனர்- யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாள...
ஜனாதிபதியின் தூரநோக்கு சிந்தனை சில வருடங்களின் பின்னரே வெளிப்படும் - நாட்டு மக்களின் ஒத்துழைப்பே அர...
நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் எதிர்க்கட்சிகளிடம் கிடையாது - அமைச்சர் ஹரின் பெர்னாண்ட...

கிண்ணியா படகுப்பாதை - ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில் நுட்பக் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்ப...
மின் பிறப்பாக்கிகள் சீரமைக்கப்பட்டுவரும் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின் தடை ஏற்படக்கூடும் ...
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டம் - அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக...