ஜனாதிபதியின் தூரநோக்கு சிந்தனை சில வருடங்களின் பின்னரே வெளிப்படும் – நாட்டு மக்களின் ஒத்துழைப்பே அரசுக்கு தேவை – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு!

Friday, February 10th, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளின் பிரதிபலன்கள் சில வருடங்களின் பின்னரே தெரியவருமென அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை யை எதிர்க்கட்சியினர் எதிர்த்து அத னைப் பகிஷ்கரித்தனர். நாடு எதிர்கொண்டுள்ள இத்தகைய நெருக்கடி நிலையில் எதிர்க்கட்சி பொறுப்பின்றி நடந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சர்வதேச நாணய நிதியம் தொடர்பில்,  எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் அவரது அறியாமையை வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் –

நாட்டின் தற்போதைய நிலை, அதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஜனாதிபதியின் அக்கிராசன உரை தெளிவுபடுத்தியுள்ளது.

நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி உள்ளது. எத்தகைய அரசியல் நோக்கங்கள் இருந்தாலும் அந்த வழியை அனைவரும் தெளிவு படுத்திக் கொள்வது அவசியமாகும்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரையை எதிர்க்கட்சியினர் பகிஷ்கரித்தனர். சிறந்த கல்விமான்களான பேராசிரியர்கள் கூட அதனை பகிஷ்கரித்தமை வியப்புக்குரியது. உண்மையில் நாடு தேர்தல் ஒன்றுக்கு தயாராகி வரும் நிலையிலேயே ஜனாதிபதி இத்தகைய உரையொன்றை ஆற்றியுள்ளார். இது அரசாங்கத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாதிக்கும். எனினும் மாற்று வழி இல்லாத நிலையிலேயே தேர்ந்தெடுத்துள்ள வழி தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் மிக கஷ்டமான காலகட்டம் தொடர்பில் தெரிவித்த அவர்,

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பது, வரி அதிகரிப்பு, மின்சார கட்டணம் அதிகரிப்பு, எரிபொருள் அதிகரிப்பு என்பது தொடர்பில் மறைப்பதற்கு எதுவுமில்லை. ஒரு போதும் அரசாங்கம் அதனை விரும்பவில்லை. எனினும், நாட்டில் தொடரும் பற்றாக்குறையை ஓரளவேனும் நிவர்த்தி செய்வதற்கு அதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது. அதனையே தமது உரை மூலம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதைப் புரிந்து கொள்வது அவசியம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: