குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை!

Wednesday, May 12th, 2021

குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டுவசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் விசேட கவனம் செலுத்துமாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு பிரதமர் மஹிந்த ராஜபகஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தின் போதே தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு, பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மற்றும் தற்போதைய திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் பிரதமர் அதிக கவனம் செலுத்தியிருந்தார்.

குறித்த திட்டங்களை எந்த தாமதமும் இன்றி விரைவாக பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் துறைசார் அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பம்பலப்பிட்டி மற்றும் நாரஹேன்பிட்டி பிரதேசங்களில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களுக்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறும் உரிய ஒப்பந்த நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தி அதிகமான மக்களுக்கு வீட்டு வசதி கிடைக்கும் வகையில் திட்டத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: