அனைத்து மது உற்பத்தி நிறுவனங்களையும் CCTV கமெராக்கள் மூலம் மதுவரி திணைக்களத்துடன் இணைக்க நடவடிக்கை – நிதி ராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, September 7th, 2023

அனைத்து மது உற்பத்தி  நிறுவனங்களையும் CCTV கமெராக்கள் மூலம் மதுவரி திணைக்களத்துடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிதி ராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஊக்குவிப்பு தொகையை சட்டரீதியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரசாங்கம் மதுபான பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்காது என்றும் கடந்த காலங்களில் மதுபானதின் விலையை 20 சதவீதத்தால் அதிகரித்தமை அதற்கு சான்றாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

துறை சார்ந்த கைத்தொழில் ரீதியாக கவனம் செலுத்துவதோடு சமூகத்திற்கு சீர்கேடாக இருக்கின்ற மதுபானத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

இவ்வருட இறுதிக்குள் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் – பிரதமர் மஹிந்த உறுதி!
எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகளை கண்டித்து அனைத்து பிரதேச சபையின...
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி - ஒரு பில்லியன் டொலர் கடனை நீடிக்க இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்!