தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளிப்பு!

Friday, February 3rd, 2023

இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும் நேற்று (02) கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நாற்சான்றிதழ்களை கையளித்தனர்.

ஐவரி கோஸ்ட், உருகுவே, மொங்கோலியா, சர்பியா, சூடான், ஆமேனியா, வட மசடோனியா, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு, சுவீடன் மற்றும் எக்குவடோர் ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் கனடா, மலேசியா, மாலைதீவு, ஜமைக்கா, தன்சானியா, மலாவி ஆகிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் –

என்’ட்ரி எரிக் கெமில் – ஐவரி கோஸ்ட் (Cலte d’Ivoire) தூதுவராகவும், ஜெசன் கே.ஹோல் – ஜமைக்கா உயர்ஸ்தானிகராகவும், எல்பர்டோ குவானி அமரிலா – உருகுவே (புது டெல்லி) தூதுவராகவும், கென்போல்ட் தம்பஜ்வ் – (புது டெல்லி)மொங்கோலிய தூதுவராகவும் , திருமதி. அனிசா கபுபி பெகா – தன்சானியாவின் (புது டெல்லி)உயர்ஸ்தரினகராகவும்,  சினிசா பவிக் – சர்பியா (புது டெல்லி) தூதுவராகவும்

லியோனார்ட் மெனஸி – மலாவி தூதுவராகவும் (புது டெல்லி) அப்தல்லா ஒமர் எல் ஹுசைன் – சூடான் தூதுவராகவும் (புது டெல்லி) எரிக் வொல்ஷ் – உயர்ஸ்தானிகராகவும் – கனடா தூதுவராகவும், யூரி ப்பகானியான் – ஆமேனியா தூதுவராகவும் (புது டெல்லி) ஸ்லோபடன் உசுநோவ் – வட மசடோனியா தூதுவராகவும் (புது டெல்லி) ரொபட் மெக்ஸியன் – ஸ்லோவாக்கியா தூதுவராகவும் (புது டெல்லி) திரு. பட்லி ஹிஷாம் பின் அதாம் – மலேசியா உயர்ஸ்தானிகராகவும், கலாநிதி திருமதி. எலிஸ்கா சிகோவா – செக் குடியரசின் தூதுவராகவும் (புது டெல்லி) ஜேன் தெஸ்லெப் – சுவீடன் தூதுவராகவும் (புது டெல்லி) பிரான்ஸிஸ்கோ தியோடோரா குவாரா – எக்குவடோர் தூதுவராகவும் (புது டெல்லி) அலி பயிஸ் – மாலைத்தீவு உயர்ஸ்தானிகராகவும் தமது பொறுப்புக்களை

Related posts: