துவிச்சக்கர வண்டி விற்பனை சடுதியாக வீழ்ச்சி – துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் கவலை!
Tuesday, August 16th, 2022
துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார்.
துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அதன் விலைகளும் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக துவிச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்து காணப்பட்டது.
இதன்காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்திருந்தததுடன் அதற்கான தட்டுப்பாடுகளும் ஏற்பட்டிருந்தன.
தற்போது, தட்டுப்பாடு இன்றி எரிபொருள் கிடைக்கின்றமையால் துவிச்சக்கர வண்டிகளின் பயன்பாடு குறைடைந்துள்ளதாக துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சைட்டத்திற்கெதிராக நாளை இடம்பெறவுள்ள வேலைநிறுத்தத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஆதரவு தரக் கோ...
அரசாங்கம் 2020ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்யும் - அமைச்சர் தயா கமகே!
வைத்தியசாலையிலிருந்து பலிசேன மீளவும் சிறைச்சாலைக்கு மாற்றம்!
|
|
|
முன்னாள் போராளிகளின் வாழ்வு குறித்து வடமாகாண சபைக்கு கரிசனை இல்லையா? - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசப...
தனியார் நிறுவனங்கள் தாம் நினைத்தவாறு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்ககொள்ள முடியாது - இராஜாங்க அமைச்சர் ...
காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுற...


