சைட்டத்திற்கெதிராக நாளை இடம்பெறவுள்ள வேலைநிறுத்தத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஆதரவு தரக் கோரிக்கை!

Wednesday, September 20th, 2017
 
எமது தொழிற்சங்கத்துடன் ஆசிரியர் தொழிற்சங்கம் உட்படப் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து சைட்டத்திற்கெதிராக நாளை நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தம் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். இந்த வேலைநிறுத்தத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஆதரவு தர வேண்டுமென யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்திற்குட்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க உபதலைவர் வைத்தியகலாநிதி எஸ்.மோகனகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை(20) பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நாளைய தினம் இடம்பெறவுள்ள சைட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் சேர்ந்த மாணவர்கள் கடந்த எட்டு மாதங்களாகத் தமது கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்திச் சைட்டத்திற்கெதிரான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
சைட்டத்தில் மூலம் கல்வி கற்று வெளியேறும் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகவுள்ளது. அத்துடன்
இந்தக் கல்விக்காக உள்வாங்கப்படும்  மாணவர்களின் கல்வித்தரம் அடிப்படைத் தகுதியற்றதாக அமைந்துள்ளது. குறைந்த தகுதிகளையுடையவர்கள் எதிர்காலத்தில் வைத்தியர்களாக உருவாகி நாட்டில் பணியாற்றும் போது மக்கள் எவ்வாறான மருந்துகளைப் பயன்படுத்தப் போகிறார்கள்?
சைட்டம் தொடர்பாகக் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் நியமித்த குழுவில் குறைப்பாடுகள் உள்ளன. சைட்டத்தினை நியாயமாக்கித் தொடர்வதற்கான ஒரு செயற்பாட்டினையே அந்தக் குழு பரிந்துரைக்கின்றது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts: