வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, February 20th, 2024

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அதன்பின்னர் மலையக தமிழ் மக்களதும், முஸ்லிம் மக்களதும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, முன்நோக்கிப் பயணிக்க வேண்டும்.

பொருளாதாரத்தை மேம்படுத்தி, முன்நோக்கிச் செல்லும் போதும் பிரச்சினைகள் எழும். வரி அதிகரிக்கப்பட்டதுடன் தொடர்புள்ள பிரச்சினை இருக்கிறது.

எனினும், இந்தப் பிரச்சினைகள் நீண்ட காலம் நீடிக்காது. சிறிது காலம் செல்லும் போது அந்த வரிச் சுமை குறையும் என தெரிவித்த ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பாரத் – லங்கா’ வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிகழ்நிலை மூலம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதன்பின் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: