திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் ஏற்கப்பட்டாலும் ஜூலை 02 வரை வேட்பாளர் பதிவு இல்லை – மஹிந்த!

Sunday, June 4th, 2017

உள்ளூராட்சித் தேர்தல் குறித்த திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் ஏகமனதாக ஏற்கப்பட்டாலும், தேர்தலை நடாத்த தேர்தல் வேட்பாளர் பதிவு ஜூலை 01ம் திகதிக்கு முன்னர் நடாத்த முடியாது என தேசிய வாக்காளர்கள் தினத்தினை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று(01) நடைபெற்ற நிகழ்வில் தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்திருந்தார்.

குறித்த உள்ளூராட்சி சபைகளுக்காக நியமிக்கப்படும் பிரதிநிதிகளது எண்ணிக்கை உள்ளிட்ட அதுகுறித்து நிறுவப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் 2017 ஏப்ரல் 17ம் திகதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படிருந்தது.

அதன்படி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி 2017 ஜூலை மாதம் 01ம் திகதி முதலே வேட்பாளர்கள் பதிவிடப்பட வேண்டும். அதன்படி ஜூலை 02 முதல் தேர்தல் வேட்பாளர் பதிவுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts: