பாரா விளையாட்டுத் திறனை மேம்படுத்த 9 வது ‘உயர் செயல்திறன்’ திட்டம் கைச்சாத்து!

Friday, July 16th, 2021

சிவில் மற்றும் முப்படைகளில் சேவையில் இருக்கும் பாரா விளையாட்டுத் திறன் மேம்படுத்தலை நோக்கமாக கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களம் மற்றும் தேசிய பரா ஒலிம்பிக் குழு ஆகியன கைசாத்திட்டுள்ளன.

எதிர்காலத்தில் பாரா ஒலிம்பிக் வீரர்களின் திறன்களை குறுகிய காலத்திற்குள் மேம்படுத்தல் மற்றும் ஏனைய சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவசியமான திறன்களை ஊக்குவித்தல் என்வற்றை நோக்கமாக கொண்டு மேற்படி முன்மொழிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் 47 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இளைஞர் திறன் விருத்தி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவரும் தேசிய விளையாட்டு சபை உறுப்பினரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் முன்லையில், விளையாட்டு மேம்பாட்டு திணைக்களத்தின் விளையாட்டு பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய, தேசிய பரா ஒலிம்பிக் குழுவின் தலைவர் லெப்டினன் கேணல் (ஓய்வு) எல்ஆர்டீடி ஹேரத் ஆகியோர் கொழும்பு 07 இல் உள்ள தேசிய விளையாட்டுச் சபையில் வைத்து நேற்று முன்தினம் (14) காலை வேளையில் மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டனர்.

தேசிய விளையாட்டு சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 9 வது டுஉயர் செயல்திறன்டு விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம், எதிர்காலத்தில் சிறந்த சாதனைகளுக்கு அடித்தளமிடும் வகையிலும் பாரா விளையாட்டு மற்றும் நூதன விளையாட்டுக்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் வழிவகுக்கும். அத்தோடு வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் மற்றும் எதிர்கால சர்வதேச போட்டிகளுக்கும் சிறந்த திறன்களை வெளிப்படுத்துவதற்கான ஊக்குவிப்புக்களை வழங்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வருடத்தில் ஜப்பானில் நடைபெறும் பாரா விளையாட்டு – 2021 இல் 9 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த அணியில் இராணுவத்தைச் சேர்ந்த ஏழு பேர் சேவையில் இருப்போர் மற்றும் ஓய்வு பெற்றவர்கள். கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் சிவில் துறையைச் சேர்ந்தவர் ஒருவரும் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: