தென்கிழக்கு வங்கக் கடலில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் அம்பான் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Sunday, May 17th, 2020

தென்கிழக்கு வங்கக் கடலுக்கு அண்மையாகவுள்ள கடற்பரப்பில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் அம்பான் என்ற சூறாவளியாக விருத்தியடைந்து வருகின்றது என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இத்துடன் இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 610 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பாரிய சூறாவளியாக இது விருத்தியடைவதுடன் மே 18 ஆம் திகதி காலையளவில் ஒரு மிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும் ஆரம்பத்தில் 17 ஆம் திகதிவரை வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் மே 18 ஆம் திகதிமுதல் 20ஆம் திகதிவரை வடக்கு – வடகிழக்கு திசையில் திரும்பி மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும்  இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதனால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும்காணப்படும் என்பதால் கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர்களும் இவ்விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டவியல் திணைக்களம் கேட்டுள்ளது.

Related posts: