திருகோணமலை எண்ணெய் தாங்கி குத வளாகத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய்வு!

Sunday, December 26th, 2021

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி குத வளாகத்தை இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்கள் இணைந்து அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக கனிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி குத வளாகத்தில் 99 தாங்கிகள் காணப்படுகின்றன. அவற்றில் 14 தாங்கிகள் தற்போது இந்திய நிறுவனம் ஒன்றின் வசமுள்ளது. ஏனைய 85 தாங்கிகள் பாவனைக்கு உட்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன.

இதற்கமைய பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தாங்கிகளில் 24 தாங்கிகளை இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் பயன்படுத்துவதற்கான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பயன்படுத்தப்படாமல் உள்ள 61 தாங்கிகளை இந்திய எரிபொருள் நிறுவனம் மற்றும் கனிய வள கூட்டுத்தாபனம் என்பன இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: