மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு மார்ச் 31 ற்கு முன்னர் விண்ணப்பிக்கவும் – ஆட்பதிவு தகவல் ஆணையாளர்!
Tuesday, February 5th, 2019
2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் ஆணையாளர் ஹர்டி இலுக்பிட்டிய தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டை தொடர்பான விசேட சுற்று நிருபமொன்று அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் இதன்போது விண்ணப்பிக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
ரஷ்ய இராணுவ தளபதி –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பு!
ஊரடங்கு உத்தரவை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது இலங்கை – சுகாதார சேவ...
மூடப்பட்டிருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மான...
|
|
|


