மூடப்பட்டிருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்!

Thursday, October 21st, 2021

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற உள்ளதுடன் அந்த பேச்சுவார்த்தையில் பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக உபவேந்தர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

துறைமுகங்களின் அபிவிருத்திக்கு இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற தீர்மானம் – அமைச்சர் ரணதுங்க!
விழா மண்டபங்களின் கொள்ளளவில் 50 சதவீத விருந்தினரை அனுமதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்குமாறு இலங்கை ...
தலைவர்கள் உரிய நேரத்தில் கேட்கவேண்டியவற்றை கேட்காமையின் தவறினாலேயே இலங்கையில் இனப் பிரச்சினை உருவெடு...