திடீர் விபத்து நோயாளர்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவர் – அமைச்சர் ராஜித!

Saturday, December 10th, 2016

நாட்டில் திடீர் விபத்துக்களுக்கு முகங்கொடுக்கும் நோயளர்களை விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனையை பொருளாதார குழுவிற்கு தான் முன்வைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
இலங்கையில் விபத்து மற்றும் திடீர் பரிகாரம் தொடர்பிலான தேசிய கொள்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் கூறினார்.

9962248Rajitha

Related posts: